இறை அரசின் நற்குடும்பம்



I. சில வேத பகுதிகள் :
  • குடும்பம் திருமண நிறைவை பெறும் இடம் - இ.ச. 24:5.
  • இறைவனின் இரக்கச் செயல்களைப் பறைசாற்றும் இடம் குடும்பம் - மாற் 5:19.
  • பிள்ளைகள் ஒழுக்க நெறியில் வளர்க்கப்பட வேண்டிய இடம் குடும்பம் - லேவி 19:29.
  • பெற்றோர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என எல்லாருமே பேணப்பட வேண்டிய இடம் குடும்பம் - 1திமொ 5:4.
  • மனைவியர், தாய்க்குரிய கடமைகளைச் செய்து, இல்லற மகிமையை வளர்க்கும் இடம் குடும்பம் - தீத் 2:4-5.
  • கணவனின் உழைப்பு, குடும்பத்தை பேண – தொ.நூ 30:30.
  • கணவன் எங்கே உழைக்கச் சென்றாலும், பாசத்தோடு திரும்பிச் செல்லும் இடம் குடும்பம் - தொ.நூ 31:30.
  • கணவன் எங்கிருந்தாலும், நாடும் வீடும் அவன் நினைவில் நிறைந்திருக்கும் - எண் 10:30.
  • மூதாதையர் வாழ்ந்து மடிந்த குடும்பத்தோடு தானும் இருந்து வாழ்வை முடிக்க விரும்புவது குடும்ப பற்று – 2சாமு 19:37.
  • எந்த காலத்திலும், தாம் பிறந்து வளர்ந்த இடத்தையும், குடும்பத்தையும் எண்ணி ஏக்கம் கொள்வது குடும்ப உறவு – தி.பா 137:1-6.
  • கணவன் மனைவியிடையே அன்புறவும் பாசப்பிணைப்பும் கூடும் போது, அவர்களை பிரியவிடாமல் கட்டி வைப்பது குடும்பம் - தொ.நூ 19:11-20, நீதி.த 14:1-10.

II. A. குடும்பம் திருமணத்தால் ஆரம்பமாகிறது :

1. மண ஒப்பந்தம் :
  • யாக்கோபு – ராகேல் - தொ.நூ 29:18-20.
  • தாவீது – மேராபு – 1சாமு 18:17.
  • யோசேப்பு – மரியாள் - லூக் 1:26-27.
  • மண ஒப்பந்தமானவனுக்கு சலுகை - இ.ச. 20:7.
2. திருமணம் :
  • திருமணம் செய்து, குடும்பத்தை நல்ல முறையில் நடத்த வேண்டும் - 1திமொ 5:14.
  • மணவறைப்படுக்கை மாசுறாமலிருக்க, திருமணத்தை உயர்வாக கருதுங்கள் - எபி 13:4.
3. திருமணக் கடமைகள் :
  • கணவன் தன் மனைவியோடு கூடியிருப்பான் - தொ.நூ 2:24.
  • மனைவியை விலக்கி விடாதே – மத் 5:32.
  • கடவுள் இணைத்ததை, மனிதன் பிரிக்காதிருக்கட்டும் - மாற் 10:8-9.
  • மனைவியும், கணவனைப் பிரிந்து வாழக் கூடாது – 1கொரி 7:10,11.
4. கடவுளோடு ஒப்பிடும் திருமண வாழ்வு :
  • உன்னைப் படைத்தவரே உன் கணவர் - எசா 54:5.
  • இளைஞன் கன்னிப்பெண்ணை மணப்பது போல், கடவுள் உன்னை மணந்து மகிழ்விப்பார் - எசா 62:5.
  • முடிவில்லா காலத்துக்கு, உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன் - ஒசே 2:19,20.
  • இறை அரசை, திருமண விருந்தோடு ஒப்பிடலாம் - மத் 22:2.
  • மணமகன் இயேசுவோடு, ஆயத்தமானவர் நுழைவர் - மத் 25:10.
  • ஆட்டுக்குட்டியின் மண விழாவுக்கு, மணவாட்டி ஆயத்தமாயிருக்கிறார் - வெளி 19:7.

B. குடும்ப அன்பு :

1. திருமண அன்பு :
  • ஈசாக்கு, ரபேக்கா மீது அன்பு வைத்து, தாயின் கூடாரத்தில், தன் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தார் - தொ.நூ 24:67.
  • யாக்கோபு, ராகேல் மேல் கொண்ட அன்பால், ஏழு ஆண்டுகள், அவருக்கு சில நாட்களாகவே பட்டது – தொ.நூ 29:20.
  • பெண்கள் அனைவரிலும், எஸ்தரையே மன்னர் விரும்பினார் - எஸ்தர் 2:17.
  • உன் மனைவியின் அன்பு, உன்னை எந்நாளும் ஆட்கொண்டிருப்பதாக – நீ.மொ 5:19.
  • கணவர், தன் மனைவியை, தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செய்ய வேண்டும் - எபே 5:28.
  • கணவர், தங்கள் மனைவியரை கொடுமைப்படுத்தாமல் அன்பு செய்யுங்கள் - கொலோ 3:19.

2. பெற்றோர் அன்பு :
  • என் புதல்வியரையும், பேரப்பிள்ளைகளையும் முத்தமிட, நீ ஏன் என்னை அனுமதிக்கவில்லை? – லாபான் - தொ.நூ 31:28.
  • யோசேப்புக்காக, தகப்பன் யாக்கோபு துக்கம் கொண்டாடினார் - தொ.நூ 37:34,35.
  • யாக்கோபு, தன் இளைய மகனுக்காக பரிந்து பேசுகிறார் - தொ.நூ 42:38.
  • யோசேப்பை கண்ட யாக்கோபு, பெருமகிழ்ச்சி கொண்டார் - தொ.நூ 46:30.
  • தாவீது, தன் மகனுக்காக நோன்பிருந்து மன்றாடினார் - 2சாமு 12:16.
  • தாவீது, தன் மகன் அப்சலோமை காண ஏங்கினார் - 2சாமு 13:39.
  • அப்சலேமுக்கு தீங்கிழைக்காதபடி, தாவீது கேட்டுக்கொண்டார் - 2சாமு 18:5.
  • யாயீர், தன் மகளுக்காக, இயேசுவிடம் பரிந்து பேசுகிறார் - மாற் 5:23.
  • ஊதாரி மகனின் தந்தை, மகனை கட்டியணைத்து முத்தமிட்டார் - லூக் 15:20.
3. கணவன் மனைவி :

(i) கணவனின் கடமை :
  • மனைவியை எலும்பின் எலும்பும், சதையின் சதையுமாக கணவன் நடத்த வேண்டும் - தொ.நூ 2:23.
  • தன் தாய் தந்தையை விட்டு, தன் மனைவியோடு கணவன் இருப்பார் - தொ.நூ 2:24.
  • திருமணமானதும், வீட்டில் இருந்து ஓர் ஆண்டுகாலம் கணவன் மனைவியை மகிழ்விக்க வேண்டும் - இ.ச. 24:5.
  • இளமையில் மணந்த மனைவியோடு மகிழ்ந்திரு – நீ.மொ 5:18.
  • உலக வாழ்வு வீண் என்றாலும், உனக்கு கிடைத்த அன்பு மனைவியோடு இன்புற்றிரு – ச.உ 9:9.
  • கிறிஸ்து திருச்சபையை அன்பு செய்வது போல, கணவன் மனைவியை அன்பு செய்ய வேண்டும் - எபே 5:25.
(ii) மனைவியின் கடமை
  • மனைவியர் கணவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் - எஸ்தர் 1:20.
  • சோம்பேறியாக அல்லாமல், இல்லத்தின் அலுவல்களில் கருத்தாயிருப்பாள் - நீ.மொ 31:27.
  • மனைவி கணவனிடமிருந்து பிரிந்து வாழலாகாது – 1கொரி 7:10.
  • மனைவியர், தன் கணவருக்கு பணிந்திருக்க வேண்டும் - கொலோ 3:18.
  • நம்பத்தக்கவராயும், புறங்கூறாதவராயும், சுறுசுறுப்பு உடையவராயும் மனைவியர் இருக்க வேண்டும் - 1திமொ 3:11.
  • மனைவியர் கணவனுடன் பிள்ளைகளிடமும் அன்பு காட்ட வேண்டும் - தீத் 2:4,5.
  • தூய நடத்தையால், கெட்ட கணவரை நல்வழிப்படுத்த வேண்டும் - 1பேது 3:1.
4. நல்ல ஆலோசனை :
  • சூனாமித்தாள், தன் கணவனிடம் நல்ல ஆலோசனை கூறினாள் - 2அர 4:8-10.
  • மனோவாகு தன் மனைவிக்கு நல்லாலோசனை கூறினாள் - நீதி.த 13:22.
  • பெல்சாட்சர் மன்னனுக்கு மனைவி நல்ல அறிவுரை கூறினாள் - தானி 5:10-12.
  • பிலாத்துவின் மனைவி, பிலாத்துவுக்கு நல்ல அறிவுரை கூறினாள் - மத் 27:19.

C. பெற்றோரின் கடமைகள் :

1. கற்பிக்க :
  • இறை வார்த்தையை உன் பிள்ளைகளுக்கு பேசு - இ.ச. 6:7.
  • திருச்சட்டங்களை பிள்ளைகளுக்கு விளக்கு - இ.ச. 6:20,21.
  • பிடிவாதமுள்ள பிள்ளைகளை பெரியோர்களிடம், பெற்றோர் கூட்டி வந்து திருத்துவர் - இ.ச. 21:19.
2. நற்பயிற்சியளிக்க :
  • நல் வழியில் நடக்க பிள்ளைகளை பழக்கு – நீ.மொ 22:6.
  • தந்தையர், பிள்ளைகளுக்கு இறை பயிற்சி தருவர் - எசா 38:19.
  • பெற்றோர் பிள்ளைகளுக்காக ஜெபிக்க வேண்டும் - புல 2:19.
  • பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாமல் அவர்களை கண்டித்து திருத்தி வளர்க்க வேண்டும் - எபே 6:4.
  • பிள்ளைகள் பணிவுடனும், மிகுந்த கண்ணியத்துடனும் வளர எல்லாம் செய்ய வேண்டும் - 1திமொ 3:4, 3:12.
3. திருத்தம் தர :
  • கண்டித்து திருத்துக – நீ.மொ 13:24.
  • திருத்தும் பருவத்தில் தண்டித்து திருத்து – நீ.மொ 19:18.
  • திருத்துவதால், தீமையை பிள்ளையிடமிருந்து நீக்குவாய் - நீ.மொ 22:15.
  • தண்டித்து திருத்துவதால், பாதாளத்துக்கு தப்புவிப்பாய் - நீ.மொ 23:13.
4. புத்தி சொல்லல் :
  • ஆண்டவரைப் பற்றி, பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் எடுத்து கூறு - இ.ச. 4:9.
  • ஆண்டவரைப்பற்றி, எல்லா வேளைகளிலும் பேசுங்கள் - இ.ச. 11:19.
  • அறியாத பிள்ளைகளுக்கு, ஆண்டவரை பற்றி கூறுங்கள் - இ.ச. 31:13.
  • பால் குடி மறக்கும் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்கு புத்தி புகட்டும் - எசா 28:9.

D. பெற்றோரின் "மாதிரி" :

1. தீய முன் மாதிரி :
  • அகசியா, தந்தை ஆகாபின் வழியில் தீமை செய்தான் - 1அர 22:52.
  • தாயின் கொடுமதியால் அகசியா தீய வழி நடந்தான் - 2குறி 22:3.
  • மூதாதையர் கற்றுத்தந்தபடி பாகாலை பின்பற்றினர் - எரே 9:14.
  • தந்தையர், பின்பற்றிய பொய் தெய்வங்களை பிள்ளைகளும் பின்பற்றினார் - ஆமோ 2:4.
  • அவள் தாய் சொல்லிக் கொடுத்தப்படி, யோவானின் தலையை மகள் கேட்டாள் - மத் 14:8.
2. நல்ல முன் மாதிரி :
  • உன் தந்தை தாவீதைப் போல் நீதியோடு நட – 1அர 9:4.
  • யோசேபாத் - தன் மூதாதை தாவீதின் வழியில் நடந்தார் - 2குறி 17:3.
  • தந்தையின் வழிகளை விட்டு விடாது. ஆண்டவரின் பார்வையில் நேரியதைச் செய்தார் - 2குறி 20:32.
  • தந்தை அமட்சியாவைப் போல், உசியா நடந்தான் - 2குறி 26:4.
3. பெற்றோரின் தவறுகள் :
  • பிள்ளைகள் தவறு செய்த போது, தடுக்காத குற்றத்துக்கு குரு ஏலிக்கு தண்டனை – 1சாமு 3:13.
  • சாமுவேலின் பிள்ளைகள், பொருளாசைக்கு உட்பட்டு கையூட்டு வாங்கினர் - 1சாமு 8:3.
  • ஏன் இப்படி செய்கிறாய் என்று, தாவீது தன் பிள்ளை அந்தோணியாவை கண்டிக்கவில்லை – 1அர 1:6.
  • தன் விருப்பம் போல் விடப்பட்ட பிள்ளைகள், பெற்றோருக்கு வெட்கத்தை வருவிப்பார் - நீ.மொ 29:15.
4. பெற்றோர் ஒரு சார்பு நிலை :
  • ஈசாக்கு ஏசா மேலும், யாக்கோபு மேல் ரபேக்காளும் அன்பு கொண்டிருந்தனர் - தொ.நூ 25:28.
  • யாக்கோபு, யோசேப்பை, மற்றெல்லா பிள்ளைகளை விட அதிகம் அன்பு செய்தார் - தொ.நூ 37:31.
  • யோசேப்புக்கு அதிக சொத்தை யாக்கோபு கொடுத்தார் - தொ.நூ 48:22.
  • வேலைக்காரிகளின் பிள்ளைகள் இறந்தாலும் பரவாயில்லை எனறு, யாக்கோபு அவர்களை முதல் வரிசையில் நிறுத்தினார் - தொ.நூ 33:2.
5. பெற்றோரின் பாவம், பிள்ளைகளை தொடரும் :
  • பெற்றோரின் பாவங்களுக்காக தலைமுறை தோறும், கடவுள் தண்டனை வழங்குவார் - வி.ப. 20:5, 34:7.
  • மூதாதையர் செய்த குற்றங்களுக்காக பிள்ளைகளுக்கு தண்டனை உண்டு – லேவி 26:39.
  • ஆண்டவர், மூதாதையர் குற்றங்களுக்காக, பிள்ளைகளை தண்டிப்பார் - எண் 14:18.
  • 40 ஆண்டுகள், உங்கள் பிள்ளைகள், உங்கள் பொருட்டு துன்புறுவர் - எண் 14:33.
  • மூதாதையர் பொருட்டு பிள்ளைகளுக்கு போர்க்களம் - எசா 14:21.
  • தந்தையரின் குற்றங்களுக்கான தண்டனை பிள்ளைகளுக்கு – எரே 32:28,29.

E. பெற்றோரின் உணர்வுகள் :

1. பெற்றோரின் அன்பு :
  • ஆபிரகாம், தன் மகனுக்கு தனக்குரிய அனைத்தையும் கொடுத்தார் - தொ.நூ 24:36.
  • யாக்கோபு, தன் மகன் யோசேப்புக்கு, அழகு வேலைப்பாடு மிகுந்த ஓர் அங்கியை செய்து கொடுத்தார் - தொ.நூ 37:3.
  • காலேபு, தன் மகளுக்கு நீரூற்று உள்ள நிலத்தைக் கொடுத்தார் - யோசு 15:19.
  • சாமுவேலின் தாய் அவனுக்கு ஆண்டுதோறும் ஒரு சிற்றாடை செய்து கொடுப்பார் - 1 சாமு 2:19.
  • பிள்ளைகளுக்கு பெற்றோர் நன்கொடைகள் அளிப்பார் - மத் 7:11.
2. பெற்றோரின் மகிழ்ச்சி :
  • ஞானமுள்ள மகன், தந்தையை மகிழ்விப்பான் - நீ.மொ 15:20.
  • நேர்மையுள்ள பிள்ளையால், பெற்றோர் களிகூர்வர் - நீ.மொ 23:24.
  • மகனே, நீ ஞானமுள்ளவனாகி என்னை மகிழச்செய் - நீ.மொ 27:11.
  • ஞானத்தை விரும்புவோர், தந்தையை மகிழ்விப்பார் - நீ.மொ 23:3.
  • திரும்பி வந்த மகனுக்காக, தந்தைக்கு மகிழ்ச்சி – லூக் 15:23.
3. பெற்றோரின் கவலை :
  • அப்சலோமுக்காக தாவீது கதறல் - 2சாமு 18:33.
  • அறிவற்ற மக்களால், தாய்க்கு துயர் - நீ.மொ 10:1.
  • மதிகேடரை பெற்றவர், கவலைக்குள்ளாவார் - நீ.மொ 17:21.
  • மதிகெட்ட மகனால் தாய்க்கு துயரம் - நீ.மொ 17:25.
  • மதிகெட்ட மகனால் தந்தைக்கு கேடு – நீ.மொ 19:13.
  • பெற்றோரை கொடுமைப்படுத்தும் மகன், அவர்களுக்குத் துயரம் தருவான் - நீ.மொ 19:26.
  • ஊதாரிகளோடு சேர்ந்த மகன், தந்தைக்கு கவலை தருவான் - நீ.மொ 28:7.
  • விருப்பம் போல் விடப்பட்ட பிள்ளையால், பெற்றோருக்கு கவலை – நீ.மொ 29:5.
4. பெற்றோரின் அக்கரை :
  • சகோதரரை விசாரித்து வர, யோசேப்பை யாக்கோபு அனுப்பினார் - தொ.நூ 37:14.
  • சவுலைக் காணாததால், பெற்றோர் பாரப்பட்டனர் - 1சாமு 10:21.
  • தாவீது அரசன், அப்சலோமின் நலம்பற்றி அக்கரை கொண்டு விசாரித்தார் - 2சாமு 18:29.
  • மொர்தொக்காய் ஒவ்வொரு நாளும், எஸ்தரின் நலம்பற்றி விசாரித்து அறிந்து வந்தார் - எஸ்தர் 2:11.

F. பிள்ளைகள் :

1. கடவுளின் கொடை :
  • யாக்கோபு, தன் பிள்ளைகள் கடவுள் கருணையுடன் அருளிய கொடை என்று, ஏசாவுக்கு சொன்னார் - தொ.நூ 33:5.
  • கடவுள் தந்த மைந்தர்கள் இவர்கள் என்று யோசேப்பு, தன் பிள்ளைகளை யாக்கோபுக்கு காட்டினார் - தொ.நூ 48:9.
  • ஆபிரகாமுக்கு நான் ஈசாக்கை அளித்தேன் என்று, கடவுள் கூறினார் - யோசு 24:3.
  • மலடிக்கு கடவுள் தாய்மைப்பேறு அருள்கிறார் - தி.பா 113:9.
  • பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம் - தி.பா 127:3.
  • ஆண்டவர் எனக்கு அருளிய குழந்தைகள் – எசா 8:18.
2. உயர்வாக கருதப்பட்டனர் :
  • பிள்ளைகள், வீரரின் கையிலுள்ள அன்புக்கு ஒப்பானவர் - தி.பா 127:4,5.
  • பிள்ளைகள், ஒலிவ கன்றுகள் போல் சூழ்ந்திருப்பர் - தி.பா 128:3.
  • முதியோருக்கு பேரப்பிள்ளைகள் மணிமுடி போன்றவர் - நீ.மொ 17:6.
  • விண்ணரசு சிறுபிள்ளைகளுக்குரியது – மத் 19:4.
3. பிள்ளைகள் தாய் தந்தையை போற்ற பிறந்தவர் :
  • தாய் தந்தையை போற்று, நீடிய வாழ்வடைவாய் - வி.ப. 20:12.
  • தாய் தந்தைக்கு அஞ்சுங்கள் - லேவி 19:3.
  • தாய் தந்தையை பழிக்கிறவர் சபிக்கப்படுக - இ.ச. 27:16.
  • பெற்றோரின் நற்பயிற்சியை தள்ளிவிடாதே – நீ.மொ 1:8.
  • பெற்றோரை சபிக்கிறவனின் விளக்கு, இருளில் அணையும் - நீ.மொ 20:20.
  • பெற்றோரை பழிக்கிறவர்களின் கண்களை கழுகு தின்னும் - நீ.மொ 30:17.
  • பெற்றோரை சபிப்போர் கொல்லபட வேண்டும் - மத் 15:4.
  • பெற்றோரை மதிப்பதே, வாக்குறுதியை உள்ளடக்கிய கட்டளை – எபே 6:2.
4. நல்ல பிள்ளைகளுக்கு உதாரணம் :
  • யோசேப்பு – தன் குடும்பத்தாரை பேணிக்காத்தார் - தொ.நூ 47:12.
  • தாவீது – மோவாபு மன்னனிடம் பெற்றோரை ஒப்படைத்தார் - 1சாமு 22:3-4.
  • சாலமோன் - சாலமோனின் அரியணைக்கு அருகே, தாய்க்கும் இருக்கை போடப்பட்டது – 1அர 2:19.
  • எலிசா – நல்ல தந்தையிடம், விடைபெற அனுமதி கேட்டார் - 1அர 19:20.
  • யோனதாபின் பிள்ளைகள் - பெற்றோருக்கு பணிந்து நல்லொழுக்கத்தை கடைபிடித்தனர் - எரே 35:8.
  • இயேசு – பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார் - லூக் 2:51.
5. பிள்ளைகளுக்குரிய கீழ்ப்படிதல் :
  • பிள்ளாய், பெற்றோரின் கட்டளையை கடைபிடி – நீ.மொ 6.20.
  • என் பிள்ளையே! என் கட்டளைகளை, செல்வம் என போற்று – நீ.மொ 7:1.
  • பிள்ளைகள் பெற்றோருக்கு பணிந்திருங்கள் - எபே 6:1, கொலோ 3:20.
6. குடும்ப ஜெபத்தில் :
  • குடும்பமாக யூதா குலத்தவர் ஆண்டவர் திருமுன் நின்றனர் - 2குறி 20:13.
  • எஸ்றா நடத்திய ஜெப ஆராதனையில், மக்கள் குடும்பமாக பங்கேற்றனர் - எஸ்ரா 8:21.
  • அன்று இஸ்ராயேலர் குடும்பமாக கூடி ஜெபித்தனர் - நெகே 12:43.
  • இயேசுவுக்கு ஓசான்னா பாடும்போது, சிறு பிள்ளைகளும் சேர்ந்து கொண்டனர் - மத் 21:5.
7. கெட்ட பிள்ளைகள் :
  • பெற்றோரை அடிக்கிறவர், கொல்லப்பட வேண்டும் - வி.ப. 21:15.
  • பெற்றோரை சபிக்கிறவர் கொலை செய்யப்பட வேண்டும் - லேவி 20:9.
  • பிடிவாதமுள்ள பிள்ளையை தலைவர்களிடம் ஒப்படை - இ.ச. 21:18.
  • தங்கள் பிள்ளை, பெருந்தீனிக்காரன், முரட்டுத்தனம் உள்ளவன், சொல் கேட்பதில்லை. குடிவெறியன் என அவர்களிடம் கூறவும் - இ.ச. 21:20.
  • தீய பிள்ளையை, மக்கள் கல்லெறிந்து கொல்லட்டும் - இ.ச. 21:21.
  • பெற்றோரின் பொருளை திருடுகிறவன், கொள்ளைக்காரன் - நீ.மொ 28:24.
  • தாயை வாழ்த்தாதவர், கெட்ட பிள்ளைகள் - நீ.மொ 30:11.
8. உதவும் பிள்ளைகள் :
  • சாமுவேல் என்னும் சிறுவன் ஆண்டவர் முன் ஊழியம் செய்தான் - 1சாமு 2:18.
  • தாவீதுக்கு உதவ, யோனத்தானுக்கு சிறுவன் உதவி சிறுவன் உதவி செய்தான் - 1சாமு 20:36.
  • நாமானின் நோய்தீர, யூத சிறுமி உதவினாள் - 2அர 5:2,3.
  • யோவாசு என்னும் 7 வயது சிறுவன், நாற்பது ஆண்டுகள் யூதாவை ஆண்டார் - 2குறி 24:1.
  • தந்தையின் அலுவலில் ஈடுபட்டார் சிறுவன் இயேசு – லூக் 2:49.
  • இயேசுவின் ஊழியத்துக்கு உதவிய சிறுவன் - யோவா 6:9.
9. கேலி செய்யும் சுட்டி பிள்ளைகள் :
  • எலிசாவை கேலி செய்த சிறுவர் - 2அர 2:23.
  • சிறுவர்களும் என்னை ஏளனம் செய்கின்றனர் - யோபு 19:18.
  • சிறுவர் முதியோரை அவமதிப்பார் - எசா 3:5.
10. பிள்ளைகளுக்கான வாக்குத்தத்தம் :
  • நீடிய நாட்கள் நலமுடன் வாழ்வாய் - இ.ச. 5:16.
  • ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார் - தி.பா 27:10.
  • நற்பேறு பெறுவீர்கள் - நீ.மொ 8:32.
  • ஆட்டுக்குட்டிகளை அவர் தூக்கி சுமப்பார் - எசா 40:11.
  • சிறு பிள்ளைகளுக்கு இறையரசு உரியது – மாற் 10:14.
  • வாக்குறுதிகள் உங்கள் பிள்ளைகளுக்கும் உரியது – தி.தூ 2:39.
  • நலம் பெறுவாய், மண்ணுலகில் நீடுழி வாழ்வாய் - எபே 6:2.
11. பெற்றோருக்கு பிரியாமான பிள்ளைகள் :
  • தந்தை ஆபிரகாமின் விசுவாசத்துக்காக, சாகத்துணிந்த மகன் ஈசாக்கு – தொ.நூ 22:7.
  • தந்தையின் பொருத்தனைக்காக, சாகத்துணிந்த இப்தாவின் புதல்வி – நீதி.த 11:36.
  • ஆலயத்தில் வளர்ந்த சிறுவன் சாமுவேல் அனைவருக்கும் பிரியமுள்ளவனாயிருந்தான் - 1சாமு 2:26.
  • சிறுவன் யோவான் தெய்வ பிள்ளையாக வளர்ந்தார் - லூக் 1:80.
  • வெளிவேடமற்ற நம்பிக்கையுடைய சிறுவன் திமோத்தேயு இருந்தார் - 2திமொ 1:5.
  • திருச்சட்ட நூலை, குழந்தையிலேயே கற்றார் திமோத்தேயு – 2திமொ 3:15.
12. பிள்ளைகளுக்கு பெயரிடல் :
  • ஆதாம் தம் மகனுக்கு சேத் என்று பெயரிட்டான் - தொ.நூ 4:25.
  • இலாமேக்கு தன் மகனுக்கு நோவா என்று பெயரிட்டான் - தொ.நூ 5:29.
  • ஆபிரகாம் தன் மகனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டார் - தொ.நூ 21:3.
  • ராகேல் தம் மகனுக்கு நப்தலி என்று பெயரிட்டார் - தொ.நூ 30:8.
  • யோசேப்பு, தலைமகனுக்கு மனாசே என்று பெயரிட்டார் - தொ.நூ 41:51.
  • பார்வோனின் மகள் அவனுக்கு மோசே என்று பெயரிட்டார் - வி.ப. 2:10.
13. பிள்ளைகளை தத்தெடுத்தல் :
  • ஆபிரகாம், தனக்கு பிள்ளையில்லாததால், தன் வேலைக்காரனை தத்தெடுப்பதாக கடவுளிடம் கூறினார் - தொ.நூ 15:3.
  • யோசேப்பின் இரு புதல்வர்களையும், யாக்கோபு தத்தெடுத்தார் - தொ.நூ 48:5.
  • மோசேயை பார்வோனின் மகள் தத்தெடுத்தார் - வி.ப. 2:10.
  • மார்தொக்காய், தன் சகோதரனின் மகள் எஸ்தரை தத்தெடுத்தார் - எஸ்தர் 2:7.
14. பிள்ளைகளை முன்னறிவிப்பு :
  • இஸ்மாயேலின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – தொ.நூ 16:11.
  • ஈசாக்கின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – தொ.நூ 18:10.
  • சிம்சோனின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – நீதி.த 13:13.
  • சூனாமித்தாளுக்கு பிள்ளை பிறப்பதாக முன்னறிவிக்கப்பட்டது – 2அர 4:16.
  • யோசிபா அரசனின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – 1அர 13:2.
  • எம்மானுவேலின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது - எசா 9:6.
  • இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – மத் 1:21.
  • யோவானின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – லூக் 1:13.
15. பிள்ளைகளின் பிறப்புரிமை (தலைமகன் உரிமை)
  • ஏசாவின் தலைமகனுரிமையை அவன் விற்றான் - தொ.நூ 25:33.
  • யாக்கோபின் மகன் ரூபன், தலைமகன் உரிமை பெற்றான் - தொ.நூ 43:33.
  • தலைச்சன் உரிமையை, உரியவருக்கு தரவேண்டும் - இ.ச 21:16.
  • யோசபாத்து, யோராமுக்கு தலைமகனுக்குரிய அரசை அளித்தார் - 2குறி 21:3.

G. குடும்ப பிரச்சனைகள் :
  • சாராளை, பணிப்பெண் ஆகார் தான் கருவுற்றிருப்பதை அறிந்து இழிவாக பேசினாள் - தொ.நூ 16:5.
  • ஈசாக்கு, ரபேக்காளும், மருமக்களால் மனக்கசப்பு அடைந்தார் - தொ.நூ 26:34,35, 27:46.
  • தந்தையிடமிருந்து, யாக்கோபு பெற்ற ஆசியை முன்னிட்டு, ஏசா அவன் மீது வர்மம் கொண்டான் - தொ.நூ 27:41.
  • யோசேப்பை, யாக்கோபு அதிகம் நேசிக்கிறார் என்று கண்டு சாராதவர், அவரை வெறுத்தனர் - தொ.நூ 37:4.
  • மோசே, எத்தியோப்பிய பெண்ணை மணந்ததால், ஆரோனும் மிரியாமும் அவருக்கெதிராக பேசினர் - எண் 12:1.
  • தாவீது, பேழைக்கு முன்பு குதித்து ஆடியதால், மனைவி மீக்கால் அவரை தன் உள்ளத்தில் வெறுத்தாள் - 2சாமு 6:16.
  • உன் குடும்பத்திலிருந்தே தீங்கை வருவிப்பேன் - 2சாமு 12:11.
  • வஸ்தி கீழ்படியாததால், அகஸ்வேர் மன்னன், அவளை வெறுத்து ஒதுக்கினான் - எஸ்தர் 1:12.

H. குடும்பத்துக்கு பகைவன் :
1. விபச்சாரம் :
  • விபச்சாரம் செய்யாதே – வி.ப. 20:14, மத் 5:27,28.
  • அடுத்தவன் மனைவியோடு உடலுறவு கொண்டால், இருவரும் கொலை செய்யப்பட வேண்டும் - லேவி 20:10.
  • காமுகனின் கண், கருக்கலுக்காய் காத்திருக்கும் - யோபு 24:15.
  • பரத்தமையில் ஈடுபட்டால், மனைவியை விலக்கு – மத் 19:9.
  • கணவன் இருக்கும் போது, பெண் வேறொருவரோடு வாழ்ந்தால், அவள் விபச்சாரி – உரோ 7:3.
  • பரத்தமையில் ஈடுபடுவோருக்கு, இறை அரசு இல்லை – 1கொரி 6:9.
  • கற்பு நெறி இழந்த பெண்களை சுற்றியே வருவர், சாபத்துக்குள்ளானவர் - 2பேது 2:14.
2. பலதாரம் :
  • இலாமேக்கு, இரண்டு பெண்களை மணந்து கொண்டார் - தொ.நூ 4:19.
  • ஆபிரகாம், ஆகாரை மனைவியாக்கினார் - தொ.நூ 16:3.
  • ஏசா நாற்பது வயதில் யூதித்தையும், பாசமத்தையும் மணந்தார் - தொ.நூ 26:34.
  • யாக்கோபு, லேயாள், ராகேல் என்று இருவரை மணந்தார் - தொ.நூ 29:28.
  • கிதியோனுக்கு பல மனைவியர் இருந்தனர் - நீதி.த 8:30.
  • எல்கானாவுக்கு அன்னா, பெனனா என்ற இரு மனைவியர் இருந்தனர் - 1சாமு 1:2.
  • சாலமோனுக்கு பல மனைவியர் இருந்தனர் - 1அர 11:1-3.
3. பலதாரத்துக்கு தடை :
  • மனம் ஆண்டவரை விட்டு அகலாதிருக்க, பல மனைவியர் ஆகாது - இ.ச. 17:17.
  • இளமையில் மணந்த மனைவிக்கு கணவன் நம்பிக்கை துரோகம் செய்யலாகாது – மலா 2:15.
  • ஒரு மனைவி கொண்டவராயிருங்கள் - 1திமொ 3:2, தீத் 1:6.
4. வைப்பாட்டிகள் :
  • கிதியோனுக்கு, வைப்பாட்டிகள் இருந்தனர் - நீதி. 8:31.
  • தாவீதுக்கு, பல வைப்பாட்டிகள் இருந்தனர் - 2சாமு 5:13.
  • சாலமோனுக்கு 300 வைப்பாட்டிகள் இருந்தனர் - 1அர 11:3.
  • ரகபேயாம் 60 வைப்பாட்டிகளை கொண்டிருந்தார் - 2குறி 11:21.
5. விவாகரத்து :
  • தகாத வாழ்க்கையின் நிமித்தம் விவாகரத்து - இ.ச. 24:1.
  • அன்னிய பெண்களை விவாகரத்து செய்தனர் - எஸ்ரா 10:3.
  • மணவிலக்கு சான்றிதழ் கொடுத்து விவாகரத்து – மத் 5:31.
  • பொறுமையும், ஸ்னேகமும், தெய்வபயமும் குறைந்த இடங்களில், விவாகரத்து சாதாரணமாகப் பேசப்படுகிறது. இது, அலகையின் அரசுக்கு இயல்பானது. ஆனால், இறை அரசின் பங்காளிகளுக்கு, விவாகரத்து நடப்பது குறைவு.

I. குடும்ப மகிழ்ச்சிக்கு காரணங்கள் :
  • மனைவி மீது, கணவன் கொண்ட அன்பால் மகிழ்ச்சி – தொ.நூ 24:67. (ஈசாக்கு, ரபேக்கா)
  • சாராளுக்கு, குழந்தை பிறந்ததால் குடும்பத்தில் மகிழ்ச்சி – தொ.நூ 21:6.
  • பிள்ளைகள் வீட்டில் கூட இருக்கும் போது மகிழ்ச்சி – யோபு 29:5, தி.பா 127:4,5.
  • மனைவி, தாய் என்ற அந்தஸ்தை பெறும்போது மகிழ்ச்சி – நீ.மொ 31:28.
1. குடும்ப ஆத்மீகம் :
  • நானும் என் குடும்பமும் கர்த்தரையே செவிப்போம் - யோசுவா கூறினார் - யோசு 2:15.
  • யோபு, தன் பிள்ளைகளுக்காக, நாள்தோறும் எரிபலி ஒப்புக்கொடுத்தார் - யோபு 1:5.
  • குடும்பம் கூடி, கடவுளின் வல்ல செயலை பேச வேண்டும் - லூக் 8:39.
  • மரியா, இயேசுவின் காலடியில் அமர்ந்து, அவர் சொல்வதை கேட்டாள் - லூக் 10:39.
  • தாம் சந்தித்த ஆண்டவரைப் பற்றி, மற்றவர்க்கும் எடுத்துக் கூற வேண்டும் - யோவா 1:41.
  • லீதியாளும், அவள் வீட்டாரும் திருமுழுக்கு பெற்றனர் - தி.தூ 16:15.
  • சிறைக் காவலன், குடும்பமாக திருமுழுக்கு பெற்றான் - தி.தூ 16:33.
2. இறைப்பற்றுடைய தந்தையர் :
  • ஆபிரகாம் இறைப்பற்றுடையவர் என்று கடவுள் கண்டார் - தொ.நூ 18:19.
  • யாக்கோபு, தன் வீட்டாரை தூய்மைப்படுத்தினார் - தொ.நூ 35:2.
  • மனோவாகு, கடவுளின் ஆலோசனை கேட்டு வேண்டினார் - நீதிபதி 13:8.
  • தாவீது, இறுதி நாளில் சாலமோனுக்கு இறைவழி காட்டினார் - 1அர 2:1-4.
  • தந்தை சக்கரியா, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார் - லூக் 1:67.
  • கொர்னேலியு, இறைப்பற்றுள்ளவர், ஜெபிப்பவர் - தி.தூ 10:2.
3. இறைப்பற்றுள்ள தாய்மார் :
  • சாராவை கடவுள் சிரிக்க வைத்ததாக கூறினாள் - தொ.நூ 21:6.
  • அன்னா, மகனை ஆண்டவருக்கு ஒப்புகொடுப்பதாக சொன்னாள் - 1சாமு 1:22.
  • எலிசபெத்து தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார் - லூக் 1:41..
  • மரியாள், தாழ்நிலையில் நின்றதால் உயர்வடைந்தார் - லூக் 1:46-55.
4. பெற்றோரின் ஜெபம் :
  • ஆபிரகாம், கடவுளின் இஸ்மாயிலுக்காக ஜெபித்தார் - தொ.நூ 17:18.
  • தாவீது, தன் மகனுக்காக நோன்பிருந்து வேண்டினார் - 2சாமு 12:16.
  • தாவீது, சாலமோனுக்காக ஜெபித்தார் - 1குறி 29:19.
  • பேய்பிடித்த மகனின் தந்தை, இயேசுவிடம் ஜெபித்தார் - மத் 17:15.
  • கனானேயப் பெண், தன் மகளுக்காக ஜெபித்தார் - மாற் 7:26.
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

ஊக்கம் தருபவர்கள்